2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல். பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக பெரிய பொறுப்பு வழங்கப்படுவதை ரசிக்கவில்லை பாமக தலைவர் அன்புமணி. இந்தப் புகைச்சல் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்தாலும், 2025-ம் ஆண்டு மே மாதம் வெட்ட வெளிச்சமானது. அப்போது தான், ராமதாஸ் தன்னை தானே பாமக தலைவராக அறிவித்தார். இது அன்புமணிக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து ராமதாஸ் அணி, அன்புமணி அணி என வெளிப்படையாகத் தோன்றின. அன்புமணி, ராமதாஸ்மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரவ்னீத் சிங் பிட்டு! - அமைச்சரவை விரைவில் மாற்றம்? அமைதியான ராமதாஸ் இதன் பின், இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தின் படியேறுதல். அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் என வேகமாக அடுத்தடுத்து அரங்கேறின. ஆனால், எந்தப் பேச்சுவார்த்தையும் கைகொடுக்கவில்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பிற கட்சிகளும் அப்பா-மகனை இணைக்க செயல்பட்டன. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதனால், அன்புமணி அணி அதிமுக கூட்டணியிலும், ராமதாஸ் தரப்பு சசிகலா கூட்டணியிலும் தேர்தலைக் கண்டது. இந்தத் தேர்தல் அன்புமணி தரப்பிற்கு 4 எம்.எல்.ஏக்களை தந்தாலும், ராமதாஸ் தரப்பிற்கு கிடைத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஜீரோ. தேர்தலுக்குப் பின் அப்படியே அமைதியாகிவிட்டார் ராமதாஸ். மீண்டும் ராமதாஸ், அன்புமணி! கடந்த மாதம் 24-ம் தேதி, பெற்றோர் திருமண நாளையொட்டி, தைலாபுரம் சென்றார் அன்புமணி. விரிசல் உண்டானதில் இருந்து பல சந்திப்புகள் நடந்திருந்தாலும், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இந்தச் சந்திப்பில் கண்ணீரோடு அன்புமணியை அணைத்து கொண்டார் ராமதாஸ். அன்றே அன்புமணி அணியும், ராமதாஸ் அணியும் மீண்டும் பாமக ஆகியது. இன்று ராமதாஸிற்கு பிறந்த நாள். இன்று மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளார் ராமதாஸ். அன்புமணி, ராமதாஸ்"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; என் பிள்ளைகள் 'இவர்களைப்' போல வளர வேண்டும்" - ஜோதிகா பதிவு அது. "இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. இந்த நல்ல நாளில் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இன்று முதல் எனக்கு 'அரசியல் துறவரம்'. அரசியல் துறவரம் என்று சொன்னால், நான் இனி அரசியல் பேச Thursday, அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். ஆனால் என்னைப் பார்க்க வருபவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன்; அவ்வளவுதான். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். நாங்களும் அதற்குத் துணையாக இருப்போம். என்னை வந்து பார்ப்பவர்கள் 'ஐயா நலமா?' என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம். அரசியலைப் பேசுவதற்கு இனி ஏதுமில்லை, ஏனென்றால் இன்று முதல் நான் ஒரு துறவியாகிவிட்டேன்". "டீல் பேசினேனா? இந்த எண்ணங்கள் எழும் நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது"- சோனம் வாங்சுக் வருத்தம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/s-ramadoss-announces-political-retirement-on-87th-birthday




