மும்பை, இந்தியாவின் இடஒதுக்கீடு (Reservation System) குறித்து தான் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவை நடிகை ஷில்பா ஷெட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சர்ச்சை எப்படி தொடங்கியது? நடிகை ஷில்பா ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து பகிரப்பட்டது போல ஒரு போலி ஸ்கிரீன்ஷாட் (Screenshot) சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. அதில், "இடஒதுக்கீட்டால் திறமையை உருவாக்க முடியாது. நோயாளிகள் தங்களின் சொந்த சாதியை சேர்ந்த மருத்துவர்களிடமே சிகிச்சை பெற வேண்டும்" போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அந்த பதிவு வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷில்பா ஷெட்டி மறுப்பு இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டி, தனது பெயரில் பரவி வரும் பதிவு முற்றிலும் போலியானது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "இடஒதுக்கீடு தொடர்பாக என் பெயரில் போலியாக வெளியான பதிவுகளை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அது முற்றிலும் புனையப்பட்டதும், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுமாகும். தயவுசெய்து இந்த போலி செய்திகளை நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். I am shocked to see fake statements on reservation falsely attached to my name. This is completely fabricated, malicious garbage. Do not fall for this fake news! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/shilpa-shetty-denies-controversial-reservation-remarks-calls-the-statements-completely-fabricated




