திருவண்ணாமலையில் நடந்த கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, ``என்னையும், அமைச்சர் ஷாஜகானையும் தேடி கோடி, கோடியாக பணம் கொண்டு வந்து, ஆதரவு கொடுங்கள். கையெழுத்துப் போடுங்கள் எனக் கேட்டார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல. கொள்கைக்குச் சாய்ந்தவர்கள். கடைசி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கில்தான் இருப்போம் எனக் கூறி அவர்களை விரட்டினோம். எங்களிடம் எந்த அமைச்சர் பதவி கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார்கள். எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா எங்களுக்கு பதவி கொடுப்பவன் அல்லாஹ். அவனே கொடுப்பான் என்றோம். அதன் பிறகுதான் தலைவர் எங்களை அழைத்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டார். ஷாஜகான் கேட்டது கிடைத்தது. இந்தப் பதவி அல்லாஹ் கொடுத்தது என்றார்." அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தவெக குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா பேச்சுக்கு விளக்கமளிக்கும் வகையில், ஐ.யூ.எம்.எல் பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், ``தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்வேறு கட்சிகளும் ஆட்சி அமைக்க முயன்றதால் மட்டுமே குதிரை பேரம் நடந்ததாக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ குறிப்பிட்டார். அவர் எந்தக் குறிப்பிட்ட கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் நலனுக்காகவும், சமுதாயப் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து சிறப்பான பணிகளை ஆற்றி வருகின்றனர். கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அவ்வப்போது தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தற்போது புதிதாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அரசினுடைய நல்ல திட்டங்களைப் பாராட்டுவதும், குறைகள் இருந்தால் அதை ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் சுட்டிக்காட்டுவதுமே ஒரு நல்ல எதிர்க்கட்சிக்கு அழகாகும். அதை விடுத்து தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்வதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப்போதும் 'இந்தியா' கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிக்கிறது." என்றார். IUML: ``அப்படி நீங்களா கற்பனை பண்ணிகிட்டா எப்படி பாய்" - திமுக-வுடன் உறவை முறித்த காதர் மொய்தீன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/the-allegation-made-by-the-iuml-mla-regarding-horse-trading-became-a-topic-of-discussion



