நெல்லை, நெல்லை, பெருமாள்புரம் பகுதியில் உள்ள விடுதியில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மகளிர் விடுதிக்குள் புகுந்த வாலிபர் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மகளிர் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13-ந்தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விடுதிக்குள் ஒரு வாலிபர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து, வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். பெண்கள் உள்ளாடைகள் திருட்டு அந்த வாலிபர், அங்குள்ள கொடியில் பெண்கள் காயப்போட்டிருந்த உள்ளாடைகளை திருடி, அந்த துணிகளை ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு மீண்டும் சுவரை ஏறி குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வாலிபர் கைது இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தமீமுன் அன்சாரி (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாள்புரம் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-breaking-into-hostel-and-stealing-womens-underwear




