சென்னை, தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள். இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது இருவரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நிலையில், சொந்த தொழில் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரூ.46 கோடி அளவில் காசோலை மோசடி நடைபெற்றதாக தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதா அளித்த புகாரில், “ஆர்.ஆர். கார்டன் என்ற பெயரில் பிசினஸ் செய்து வருகிறேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், சென்னை வளசரவாக்கத்திலுள்ள எனது வீட்டின் தரைத்தளப் பகுதியில் தங்குவது வழக்கம். எனது சகோதரி அம்பிகா நாயரும் அதே தரைத்தளப் பகுதியில் தங்கியிருந்து, தரைத்தளத்தில் உள்ள எனது பகுதிக்கு வந்து சென்று கொண்டிருந்தார். தொழிலாளர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணம், தோட்டம் பராமரிப்புப் பொருட்களுக்கான கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்துவதற்காக, கையொப்பமிட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை(பிளாங்க் செக்) எனது அறையில் வைப்பது வழக்கம். எனது சகோதரி அம்பிகா நாயரும், சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் நான் கையொப்பமிட்ட காசோலைகளைத் திருடி, அதனை பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்துள்ளனர். இது முற்றிலும் சட்டவிரோதமானதாகும்” என நடிகை ராதா புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ராதாவின் புகார்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அம்பிகா இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “ராதா தொடர்ந்த வழக்கு குறித்து செய்திகளில் ரூ.43 கோடி, ரூ.46 கோடி என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொகையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். ராதா எனக்கு எனக்கு காசோலை வழங்கியது உண்மை. அந்த காசோலையை அவரே நிறுத்தி வைத்தார் என்பதும் உண்மை. ஆனால் அதற்கான காரணத்தை ராதா ஏன் சொல்லவில்லை? ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் நிறுவனம் எனது குழந்தை போன்றது. அதற்கு பெயர் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்.தான். நான் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று பார்த்தபோது, ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் என்ற பெயர் இல்லாமல் வேறு பெயர் இருந்தது. நான் கலங்கிப் போய்விட்டேன். அந்த நிறுவனத்தில் பங்கு விவகாரம் தொடர்பான நீண்ட நாட்களாக பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.எஸ். என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. அதில் எனக்கு பங்கு இருக்கிறது. அதைப் பற்றி பேசுவதற்கும் ராதா தயாராக இல்லை. தங்கம்தான் ராதாவின் பலவீனம். தங்கத்தைப் பார்த்தால் ராதா ஒரு மாதிரி ஆகிவிடுவார். என்னுடைய தங்கம் நிறைய அவரிடம் உள்ளது. அது பற்றியும் எந்த பதிலும் இல்லை. வீட்டில் இரவில் தூங்கும்போது தனது கைப்பையை பூட்டி நம்பர் லாக் போடும் அளவுக்கு கவனமாக இருக்கக் கூடியவர் ராதா. அப்படி இருக்கும்போது கையெழுத்து போட்ட காசோலையை வீட்டில் வைத்திருந்ததாக அவர் கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறதா? எனது சகோதரி ராதா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது வேதனையாக இருக்கிறது. அவர் செல்போனில் அழைத்தபோது நான் எடுக்கவில்லை என்று சொல்கிறார். அவரது மகளின் திருமணத்தில் முன்னாள் நின்று வேலை செய்து கொண்டிருந்தேன். அவர் செல்போனில் அழைத்தால் நான் ஏன் எடுக்காமல் இருக்க வேண்டும்? வீட்டு விஷயத்தை வீட்டுக்குள்ளேயே வைத்து முடிக்கலாம் என்று நினைத்தேன். ராதா எனக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக தான் 3 காசோலைகளை கொடுத்தார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-is-radhas-weakness-ambikas-sensational-interview




