Fuld artikel
37 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த `தர்மத்தின் தலைவன்' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார், குஷ்பு. அப்போது, "தம்பி சைனா பொம்மை மாதிரி செவப்பா ஒரு பொண்ணு நடிக்க வந்திருக்கு. இந்த சினிமா உலகத்துல எப்படி போராடி ஜெயிக்கப் போவுதோ தெரியலப்பா " என்று ஆதங்கப்பட்டார் மனோரமா ஆச்சி. அதன்பிறகு, "வருஷம் 16 ", " சின்னத்தம்பி " என்று கோலிவுட்டில் உச்சத்துக்கு போனார். ஒரு கட்டத்தில் குஷ்புவுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தும் நிலைக்கு ரசிகர்களை பெற்றார், . அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். முதலில் தி. மு. க அடுத்து காங்கிரஸ் இப்போது பா. ஜ. க என்று ரவுண்டு கட்டிக்கொண்டு இருக்கிறார். இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தார், சுந்தர்.சி . ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் அன்பே சிவம் , அஜித்துடன் உன்னைத் தேடி படங்களை இயக்கி முன்னணி டைரக்டரானார். இவருடன் சம காலத்தில் இருந்த இயக்குநர்களில் பலர் இப்போது சினிமாவிலேயே இல்லை. இவர் மட்டுமே இப்போதும் அரண்மனை, கலகலப்புனு என்று இப்போதும் லைம் லைட்டில் இருக்கிறார். எந்தவித ஈகோ எதுவும் இல்லாமல் தன்னைவிட ஜூனியர் டைரக்டரானா ஆர். ஜே. பாலாஜி இயக்கிய முக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்துக் கொண்டு இருக்கிறார். முதன் முதலாக சுந்தர் . சி இயக்கிய `முறை மாமன்' படத்தில் ஜெயராமனுக்கு ஜோடியாக நடித்தார், குஷ்பு. அப்போது ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்தில் காதலாகி, கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்தது. அவந்திகா, ஆனந்திதா என்று இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார், குஷ்பு. முதல் மகள் அவந்திகாவுக்கு ஜூன் 25 ஆம் தேதி கல்யாணம் கோவாவில் நடக்கிறது. குஷ்புவுக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவர், ஷ்ரவன் சீனிவாசன். கப்பலில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ஷ்ரவன் சீனிவாசன் மேல் அவந்திகாவுக்கு காதல் ஏற்பட, இப்போது டும்டும் நடக்கிறது. குஷ்பு வீட்டு மாப்பிள்ளை ஷ்ரவன் சென்னையில் வசிக்கிறார். மத்திய அரசின் கப்பல் துறையில் மரைன் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரது தந்தை சீனிவாசனும் கப்பல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் இருவருக்கு மட்டுமே தனது மகள் அவந்திகா , மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் சகிதமாக அழைப்பிதழ் தரப்பட்டு இருக்கிறது. சுந்தர்.சி - குஷ்பு குடும்பத்தார், மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் குடும்பத்தார் என்று மொத்தம் 25 நபர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்து உள்ளனர். பொதுவாகவே சுந்தர்.சி, குஷ்பு இருவருமே சினிமா உலகை சேர்ந்த எல்லோரிடமும் அன்பாக பழகும் பாசக்கார தம்பதிகள். சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவார்களா! இல்லையா? என்பது இதுவரை தெரியவில்லை. இதுபற்றி குஷ்பு குடும்பத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். "அவந்திகாவுக்கு கூட்டம் பார்த்தாலே அலர்ஜி. யாருக்கும் சொல்லாமல் பேசாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யலாம் என்றுதான் அம்மா , அப்பாவிடம் சொன்னார். . சுந்தர் சி யும் குஷ்புவும் வற்புறுத்தி கோவாவில் நடக்க இருக்கும் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். " என்று நம்மிடம் சொன்னார்கள்.. சினிமாவில் ரவுன்ட்-கட்டி வரும் சுந்தர். சி, குஷ்பு இருவருமே முதல்வர் விஜய்யை தவிர திரைப்பட உலகைச் சேர்ந்த யாருக்குமே அழைப்பிதழ் வைக்கவில்லை என்பது ஆச்சர்யம். சென்னையில் திடீரென வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் குஷ்பு என்கிறார்கள் சினிமாவில் அவருக்கு நெருக்கமான சிலர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor


