புதுடெல்லி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் கட்சி (சிஜேபி) நாளை (அக். 2) மும்பையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் நிலவும் உள்விவகாரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள்(எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (அக். 02) மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதுபற்றி, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், டெல்லியில் போராட்டம் “ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும். கோவா, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும். ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் அக்டோபர் மாதத்தின் இறுதியில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் போராட்டமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து மத்திய கல்வி மந்திரி பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/cockroach-party-to-protest-tomorrow-demanding-resignation-of-chief-election-commissioner




