வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மோதல் இந்நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் (30வது ஆட்டம்) இன்று நடைபெற்றது. இதில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அமெரிக்காவின் டெல்லஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெக்சாஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் ஆடிய சுபர் ரஜனி 51 ரன்கள் சேர்த்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் வெற்றி இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெக்சாசை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் அபார வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் தொடக்க வீரர் காலின் மன்ரோ 62 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-texas-super-kings-loss-to-los-angeles-knight-riders




