மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual General Meeting – AGM) 29.07.2026 அன்று மதுரையில் நடைபெற்றது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பலராம கோவிந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2025–26 நிதியாண்டிற்கான இயக்குநர்கள் அறிக்கை, தணிக்கையிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் வணிக செயல்திறன் குறித்து பங்குதாரர்களிடம் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, புதிய முயற்சிகள், டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர், தரம், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவையையே தங்கமயிலின் வளர்ச்சிக்கான அடித்தளமாக நிறுவனம் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் இணை நிர்வாக இயக்குநர்களான திரு. Ba.ரமேஷ் மற்றும் திரு. N.B.குமார் ஆகியோர் கலந்து கொண்டு, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி நோக்கு, வணிக விரிவாக்க உத்திகள், வாடிக்கையாளர் சேவை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பங்குதாரர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், நிறுவனச் செயலாளர் திரு. CS K. நாராயணன், தலைமை நிதி அதிகாரி Mr.B.ராஜேஸ்கண்ணா, நிறுவனத்தின் துணைத் தலைவர்கள், பொது மேலாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர். பொதுக்குழுக் கூட்டத்தில், நிறுவனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் பல்வேறு தீர்மானங்கள் பங்குதாரர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. மேலும், நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சி, பங்குதாரர்களுக்கான மதிப்பூட்டல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. கூட்டத்தின் நிறைவில், நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்து வரும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் அனைவருக்கும் நிறுவன நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/business/thangamayil-jewellery-limited-26th-annual-general-meeting




