பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது. முதலாம் நாள் திருவிழாவான நேற்று அம்மன் சன்னிதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் நாசர்கான், திருக்கோயில் இணை ஆணையர் சுரேஷ், பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ், த.வெ.க நகர் செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பர்வதவர்த்தினி அம்மன்ஆடி திருவிழா கொடியேற்றம் இதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடி அமாவாசை தினம் வரும் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், காலை 11 மணி அளவில் ஶ்ரீ ராமர் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்குகிறார். அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறதுதி 15-ம் தேதி காலை 6 மணிக்கு அம்பாள் தபசு மண்டபத்தில் எழுந்தருளி, மாலை 3 மணிக்கு மேல் சுவாமி - அம்பாள் மாலை மாற்று வைபவமும் நள்ளிரவு 2 மணிக்கு பூ பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 16-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது. இதை முன்னிட்டு தினசரி அம்பாள் வீதி உலாவும், அதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளாக பட்டிமன்றம், நாட்டிய நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/spiritual/rameswaram-ramanathaswamy-temple-aadi-thiruvila-began-with-flag-hoisting-wedding-ceremony-on-august-16




