சென்னை, ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி–ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசை ‘தி பாரடைஸ்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் கதை 1980-களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தினர், அமைப்புரீதியான அடக்குமுறைக்கு எதிராக தங்களது உரிமைகளுக்காக போராடுவதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தசரா’ படத்தைப் போலவே இப்படத்திலும் நானியின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வைரலான டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ‘யெஷனாகுலா’ பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வைரலானது. இதன் மூலம் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 24-ல் திரைக்கு வருகிறது இந்த நிலையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 23-ந் தேதி இரவு இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. நானி–ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியின் முந்தைய வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/new-release-date-announced-for-the-film-the-paradise-starring-nani



