தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் கோட்டம் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-today-2




