சென்னை, வாழ சிறந்த நகரங்கள் பொருளாதார நிபுணர் புலனாய்வுப்பிரிவு (எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் வாழ சிறந்த நகரங்கள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. நகரங்களின் அரசியல் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் தரவரிசையில் மாற்றங்கள் நிகழுகிறது. குற்றங்களின் விகிதம், போர்கள் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் இல்லாத பாதுகாப்பான சூழல், தரமான மருத்துவ வசதிகள், தூய்மையான சூழல், காலநிலை, பொழுதுபோக்கு, கலாசார சுதந்திரம், சிறந்த கல்விக்கூடங்கள், உயர்கல்வி வாய்ப்புகள், சிறந்த போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து 100 புள்ளிகளுக்கு (பாயிண்ட்) எவ்வளவு புள்ளிகள் பெற்றுள்ளன என்ற அடிப்படையில் இந்த பட்டியல் தயாராகிறது. டெல்லி, சென்னை அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை, பொருளாதார நிபுணர் புலனாய்வுப் பிரிவு அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 173 நகரங்களை கணக்கிட்டு அதில் சிறந்த நகரங்களை பட்டியலிட்டிருக்கிறது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரியாவின் வியன்னா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரங்கள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவின் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. டெல்லிக்கு 120-வது இடம், மும்பைக்கு 121-வது இடம், சென்னைக்கு 123-வது இடம், பெங்களூருவுக்கு 127-வது இடமே கிடைத்துள்ளன. பின்தங்கியதற்கு காரணம் என்ன? இந்திய நகரங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு, அடிப்படை உள்கட்டமைப்பு நெரிசல், சுகாதார சேவை அழுத்தம் போன்றவற்றால் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன. இந்திய நகரங்கள் உலகின் முக்கிய பொருளாதார மையங்களாக வளர்ந்து வரும் அதே வேளையில், வாழ தகுதியான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை மேம்படுத்துவது அவசியம் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-best-cities-to-live-where-does-chennai-rank




