சென்னை, விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது பேபி பம்ப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பிரபல தொகுப்பாளினி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’, ‘ஸ்டார்ட் மியூசிக்’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. மேலும், ‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தாயாகும் மகிழ்ச்சியில் பிரியங்கா பிரியங்கா தேஷ்பாண்டே, டிஜே வசி சாச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தாங்கள் பெற்றோராகப் போவதாக கடந்த ஜூன் மாதம் சமூக வலைதளம் மூலம் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வரும் பிரியங்கா, தனது அழகான பேபி பம்ப் (Baby Bump) புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/priyanka-deshpande-shares-baby-bump-photos




