சென்னை, தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தின்படி, யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு 2027-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு 06.09.2026 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் இந்த மதிப்பீடுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 18.07.2026 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2026 ஆகும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/education-and-employment/scheme-to-provide-financial-assistance-to-upsc-aspirants-tamil-nadu-government-announces-assessment-test




