பெருமாள் கோவில்களுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அர்ச்சகர் துளசியும், தீர்த்தமும் வழங்குவார். அத்துடன் தலையில் கிரீடம் போன்ற ஒரு பொருளை வைத்து ஆசீர்வதிப்பார். அதற்கு 'சடாரி' அல்லது 'சடகோபம்' என்று பெயர். எதற்காக இந்த சடாரி சேவை? இந்த சடாரியின் பின்னணியில் உள்ள ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவம் என்ன? என்பதை பார்ப்போம், 'சடம் ஹரி' (ஹரியின் பாதம்) என்பதே மருவி 'ஸ்ரீ சடாரி' என்று அழைக்கப்படுகிறது. சடாரியின் மேல் பகுதியில் உற்று நோக்கினால், அதில் மகாவிஷ்ணுவின் இரு திருவடிகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கருவறையில் இருக்கும் பெருமாளின் திருவடியை அனைவரும் தொட்டு வழிபட முடியாது. ஆனால், சடாரி மூலம் அந்த இறைவனின் அருளை நேரடியாக அனுபவிக்கலாம். சரணாகதி தத்துவம் சடாரியை தலையில் வைப்பது, பகவானின் திருவடிகளை நேரடியாகத் தலையில் வைத்துக் கொள்வது போன்றது. 'இறைவா, நான் உன் அடியேன், உன் திருவடிகளே எனக்கு தஞ்சம்' என்ற சரணாகதி தத்துவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் 'நான்' என்ற அகங்காரமும், 'எனது' என்ற மமதையும் இறைவனின் சன்னிதியில் அழிய வேண்டும் என்பதை நினைவூட்டவே சடாரி வைக்கப்படுகிறது. மேலும், வைணவ மரபில் 'நம்மாழ்வாரே' பெருமாளின் திருவடிகளாகப் போற்றப்படுகிறார். நம்மாழ்வாருக்கு 'சடகோபன்' என்ற திருநாமமும் உண்டு. எனவே, சடாரியைத் தலையில் ஏற்பதன் மூலம், பெருமாளின் அருளோடு சேர்த்து ஆழ்வாரின் அருளையும் ஒருசேரப் பெறுவதாக ஐதீகம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/shadari-seva-signifies-the-philosophy-of-surrender-to-god




