மும்பை, 2027 மார்ச் முதல் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி நிதின் கட்காரி ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் திட்டம் குறித்து கூறியதாவது: 2027 மார்ச் முதல் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் சுங்கச் சாவடிகளில், வாகன ஓட்டிகள் நிற்காமல் தடையின்றி செல்லும் வகையில் செயற்கைக்கோள் உதவி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), பாஸ்டேக் இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் 2027 மார்ச் முதல் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் நடைமுறை சோதனை அடிப்படையில் ஒரு சில சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத சுங்கச் சாவடிகளில் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும். மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வரை வருவாய் வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100 சதவீத அளவுக்கு ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். அப்படி நாடு முழுவதும் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் முறை அமலாகும்போது, சுங்கச் சாவடி வசூல் மூலம் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வரை வருவாய் கிடைக்கும். சுங்கக்கட்டணம் வசூல் அதிகரிப்பு ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தியதன் மூலம், சுங்கக் கட்டண வசூலும் அதிகரித்துள்ளது. முன்னர் ரூ.7 ஆயிரம் கோடியாக இருந்தது தற்போது ரூ.82 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலாகிறது. அதுபோல, சுங்கச் சாவடி இயக்கச் செலவும் 12 சதவீதத்திலிருந்து 2 முதல் 3 சதவீதம் அளவுக்கு குறைந்தது. எரிபொருள் செலவும் மிச்சமாகும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஆண்டுக்கு 71 கோடி மணிநேரம், 56 கோடி லிட்டர் எரிபொருள் வீணாகும். சுங்கச் சாவடிகளில் முழுவதும் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் முறை அமல்படுத்துவது, வாகன ஓட்டிகளுக்கும் பலன் தரும். சுங்கச்சாவடிகளில் காத்திருக்க அவசியமில்லாமல் செல்ல முடியும் என்பதோடு, எரிபொருள் செலவும் மிச்சமாகும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/toll-collection-through-ai-system-from-march-2027-union-minister-nitin-gadkari-informed



