இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதல் மற்றும் பிரச்சி னையில் ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா பெரும் தோல்வி அடைந்தது. இது நேரடியாக ஈரானுக்கு சாதகமாக அமைந்தது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டது இதற்கிடையே ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஈரான் உடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். இதுகுறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் அதில் கூறியதாவது:- ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாக கருதுகிறது.இதனால் உலக நாடுகள் வெறுக்கத்தக்க நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாக தோல்வியடைந்து சரணாகதி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். பொருளாதார தடை இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார போரை தொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது தெஹ்ரானுக்கு ஆதரவு அளிக் கும் எந்தவொரு நாடு அல்லது நிதி நிறுவனமும் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் ஒரு பகுதியென மீண்டும் ஒருமுறை டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, "தீவிரமான பொருளாதாரத்தடைகளை அமெரிக்க முற்றுகையுடன் இணைப்பது, உலக நாடுகளின் இறையாண்மையைப் பறிக்கும் செயல். இது மீண்டும் ஒரு முழு அளவிலான பாரம்பரிய காலனி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும்" என்றுள்ளார். மாற்று வழிகள் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் பாரிசில் சந்திக்க உள்ளனர். நீரிணையை தவிர்த்து மாற்று வழிகளில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து அவர்கள் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/war-against-the-us-the-world-has-acknowledged-irans-victory-masoud-pezeshkian




