புதுடெல்லி 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது என டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றும்போது பேசினார். நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் பேசும்போது, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இன்று நாம் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடுகிறோம். செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்படுகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவரின் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழகத்தின் திருப்பூர் ஜவுளித்துறை பற்றி பெருமிதத்துடன் பேசினார். 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது என்றார். சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்தபோதும், நாட்டில் விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் உரம் வழங்கப்படுகிறது. வர்த்தக ஒப்பந்தம் 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணி அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். புதிய உயரத்தில் இந்தியா இருக்கும். பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் அடுத்தக்கட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். லட்சியம், சிந்தனையில் சீர்திருத்தம் வேண்டும். இளைஞர்களின் சக்தி மூலம் நாம் முன்னேறவுள்ளோம். விவசாயிகள், மீனவர்களை உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உற்பத்தி துறையின் வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது. நம்முடைய பொருட்கள் சிறப்பாக இருக்க வேண்டும். ரசாயனம் இல்லா வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். வரும் காலம் ஏ.ஐ. காலம். வரும் காலம் குவாண்டம் காலம் என்று பேசினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பெட்ரோல், டீசல், உரம், மருந்து அல்லது தொழில் நுட்ப சிப்புகள் என உலக நாடுகள் இன்று தன்னிடம் என்னென்ன உள்ளனவோ அவற்றை ஆயுதமயம் ஆக்குவதில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது. எல்லைகள் கூட ஆயுதமயம் ஆக்கப்பட்டு உள்ளன. நம்முடைய தயாராதல் தொடர்ந்து வளர்ச்சி பெறும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, பசுமை சேமிப்பு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் நாம் பணியாற்ற வேண்டும். கடல் பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/india-duty-free-trade-with-over-40-countries-pm-modi-speech




