சென்னை, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1, 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆனைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ (Nalam TN) புதிய ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்-அப் செயலியை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை மருத்துவமனைகளுக்கு எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nalam-tn-new-website-chief-minister-vijay-launches-it




