"பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்"- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார். சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் ``எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆம் முறை எம்எல்ஏ ஆக்கியவர் ராமதாஸ். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணயம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன். அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும். பழநி: "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்."- நிர்மல் குமார் பகீர் ராமதாஸை ஏற்ற பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. நிறுவனர் ராமதாஸ் உடன் நான் இருந்ததால் அன்புமணி என்னை துரோகி, சாக்கடை என்று கூறினார். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணையம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன். அன்பு மணி- எம்எல்ஏ அருள் திமுக, அதிமுக, தவெக, தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்து கட்சிகளில் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. ஒரு மாதத்திற்கு பின் ஆடி மாதம் முடிந்ததும் எந்த முடிவாக இருந்தாலும் தெரிவிப்போம். பாமகவில் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இனி எந்த பாதை என்பதை ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/pmk-ex-mla-arul-slams-anbumani



