கடலூர், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து வழிபட்ட சிலைக்கு ஒன்றரை பவுன் தங்க செயினை அணிவித்திருந்தார். தொடர்ந்து 3-வது நாளில் அந்த சிலையை கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உப்பனாற்றில் கரைத்துள்ளார். சிலையை ஆற்றில் கரைத்த பிறகுதான் அதில் தங்க செயின் இருந்தது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆற்றில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நகையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/former-government-official-immerses-vinayagar-idol-along-with-a-gold-chain-in-the-river-in-cuddalore-intensive-search-for-the-jewelry-underway




