தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. எல் நினோ ஆண்டு என்பதால் 'நமக்கு என்ன மாதிரியான சவால்கள் காத்திருக்கின்றன?' என்ற அச்சமும் இயல்பாகவே எழுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் என்னென்ன என்பன குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனைத் தொடர்கொண்டு பேசினோம். மழை நம்மிடம் பேசிய அவர், "நாம் கடுமையான வெப்பத்திற்கு எதிராக நம்மைத் தயார்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போது செப்டம்பர் மாதமாக இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. வரக்கூடிய மாதங்களிலும், அடுத்த ஆண்டின் கோடை காலத்திலும் இந்த வெப்பம் மேலும் தீவிரமடையும் என்பதால் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேசமயம், 2015 மற்றும் 2023 எல் நினோ காலங்களைப் போலவே தமிழகத்தில் கடுமையான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் பருவமழைக்கான ஆயத்தப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். வடகிழக்கு பருவமழையானது மாதம் முழுவதும் தொடர்ச்சியாகப் பெய்யாமல், மழை பெய்யும் நாட்களும், நேரமும் குறைவாகவே இருக்கும். ஆனால் குறுகிய காலத்தில் அதிக அளவு தீவிர மழைப்பொழிவு இருக்கும் என்பதால் பாதிப்புகளும் அதிகமாக இருக்கக்கூடும். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் அரசு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இந்நேரம் அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் அரசு முடித்திருக்க வேண்டும். குறிப்பாக அனைத்துக் கால்வாய்களையும் தூர்வாருதல், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்துதல், நீர் வடிந்து செல்வதற்குத் தடையாக இருக்கும் அடைப்புகளை நீக்குதல் மற்றும் நீர்நிலைகளின் முழு கொள்ளளவை எட்டும் வகையில் தூர்வாரி தயார் நிலையில் வைத்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். Nepal Floods: தமிழர்களை மீட்க காட்மண்டுவில் தமிழக அதிகாரிகள்! - அவசர உதவி எண்கள் அறிவிப்பு! மேலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அங்கு தண்ணீரை வெளியேற்ற மோட்டார்களைப் பொருத்தி தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், தற்போது வரை ஆறுகள், குளங்கள், ஏரிகள் அல்லது கால்வாய்களில் தூர்வாரப்பட்டதற்கான எந்தவொரு பெரிய அறிகுறிகளும் தென்படவில்லை. மழை எனவே, பருவமழை தொடங்குவதற்கு முன் அரசு தீவிரமாகச் செயல்பட்டு இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 10 செ.மீ மழை 3 நாள்களாகப் பிரிந்து பெய்வதற்கும், வெறும் 3 மணி நேரத்தில் பெய்து முடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. எனவேதான் இந்தக் குறுகிய கால அதிதீவிர மழைப்பொழிவை எதிர்கொள்ள தூர்வாரும் பணிகள் மிக அவசியமாகிறது" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/how-will-northeast-monsoon-be-what-measures-should-tamil-nadu-government-take




