ஏசி மற்றும் மின்விசிறியை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது குறித்து பலரிடமும் பல்வேறு தவறான நம்பிக்கைகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் ஏசியை மிகக் குறைந்த வெப்பநிலையில் இயக்கி, அதே நேரத்தில் மின்விசிறியை முழு வேகத்தில் சுழல விடுவார்கள். இதனால் அறை இன்னும் வேகமாக குளிரும் என்று நினைத்தாலும், உண்மையில் அது தேவையற்ற மின்சாரச் செலவுக்கும், சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளுக்கும் காரணமாகலாம். ஆனால், ஏசி மற்றும் மின்விசிறியை சரியான முறையில் பயன்படுத்தினால், குறைந்த மின்சாரத்தில் அறையை சீரான குளிர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். அது குறித்த விவரங்களை பார்க்கலாம். மின்விசிறி என்பது அறையின் வெப்பநிலையைக் குறைக்கும் சாதனம் அல்ல. அது அறையில் இருக்கும் காற்றைச் சுழலச் செய்து, நமது தோலில் உள்ள வியர்வை விரைவாக ஆவியாக உதவுவதன் மூலம் குளிர்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. ஏசியுடன் சேர்த்து மின்விசிறியைப் பயன்படுத்தும்போது, ஏசியிலிருந்து வெளிவரும் குளிர்ந்த காற்று அறை முழுவதும் சமமாகப் பரவுவதற்கு அது உதவுகிறது. இதனால் அறை விரைவாக குளிர்வதோடு, ஏசியின் செயல்பாட்டு சுமையும் குறைகிறது. ஏசிக்கான சரியான வெப்பநிலை ஏசியை 18°C அல்லது 20°C-ல் வைத்தால்தான் அறை நன்றாகக் குளிரும் என்பது தவறான எண்ணம். இந்திய அரசு மற்றும் ஆற்றல் திறன் பணியகம் (BEE) பரிந்துரைப்பதன்படி, ஏசியின் வெப்பநிலையை 24°C முதல் 26°C வரை அமைப்பதே சிறந்தது. இந்த வெப்பநிலையுடன் மின்விசிறியை குறைந்த வேகத்தில் (Speed 1 அல்லது Speed 2) இயக்கினால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் சமமாகப் பரவும். இதன் மூலம் மின்சாரப் பயன்பாட்டையும் சுமார் 20 சதவீதம் வரை குறைக்க முடியும். மின்விசிறியை எந்த வேகத்தில் இயக்க வேண்டும்? ஏசி இயங்கும்போது மின்விசிறியை அதிக வேகத்தில் இயக்குவது எல்லா நேரத்திலும் நல்லதல்ல. அதிக வேகத்தில் சுழலும் மின்விசிறி, தரைப்பகுதியில் இருக்கும் வெப்பமான காற்றை மேலே கொண்டு வந்து, குளிர்ந்த காற்றுடன் வேகமாகக் கலக்கச் செய்யும். இதனால் அறை இன்னும் முழுமையாகக் குளிரவில்லை என்று ஏசியின் சென்சார் கருதி, கம்ப்ரஸர் நீண்ட நேரம் தொடர்ந்து இயங்கும். எனவே, மின்விசிறியை குறைந்த அல்லது மிதமான வேகத்தில் இயக்கினால், குளிர்ந்த காற்று அறையின் கீழ்பகுதியில் நீண்ட நேரம் நிலைத்திருந்து சிறந்த குளிர்ச்சியை வழங்கும். உடல்நலத்தையும் கவனிக்க வேண்டும் ஏசி மற்றும் மின்விசிறியை தவறான முறையில் பயன்படுத்தினால் சில உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படலாம். குறிப்பாக, ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும் வகையில் மின்விசிறி இயங்கினால், தசைப்பிடிப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். அதேபோல், மின்விசிறியின் இறக்கைகளில் தூசி படிந்திருந்தால், அது காற்றோடு கலந்து சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. எனவே மின்விசிறியை அடிக்கடி சுத்தம் செய்வதோடு, குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படாதவாறு அதன் திசையையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். கதவுகள், ஜன்னல்களும் முக்கியம் ஏசி மற்றும் மின்விசிறியை சரியான முறையில் பயன்படுத்தினாலும், அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருந்தால் அதனால் முழு பலன் கிடைக்காது. குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்கவும், வெளிப்புற வெப்பம் உள்ளே நுழையாமல் தடுக்கவும் கதவுகள், ஜன்னல்களை நன்றாக மூடி வைப்பது அவசியம். மேலும், தடிமனான திரைகளைப் பயன்படுத்தினால் வெப்பம் உள்ளே வருவது குறையும். இதனால் ஏசி உருவாக்கும் குளிர்ச்சியை மின்விசிறி நீண்ட நேரம் அறை முழுவதும் பரவச் செய்து, தேவையற்ற மின்சாரச் செலவைத் தவிர்க்க உதவும். இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், கோடைக்காலத்திலும் குறைந்த மின் செலவில் சுகமான குளிர்ச்சியை அனுபவிக்க முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/do-you-want-an-ac-but-also-want-to-keep-your-electricity-bill-low-try-these-tricks




