கொல்கத்தா கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 9 பேர் பலி இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் வங்காளதேச நாட்டினர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. வங்காளதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அப்போது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். புகையை சுவாசித்தபோது, அதன் பாதிப்பால் மயக்கமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/kolkata-hotel-fire-9-killed




