ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கத்தை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய ரேவந்த் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் ஏன் அதேபோன்று "ஹர ஹர மகாதேவ்" என்று முழங்குவதில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் ''தென்னிந்தியாவை சேர்ந்த நாங்கள் திராவிடர்கள். அவர்கள் ஆரியர்கள். நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள், அதேவேளையில் அவர்கள் ராமரின் பக்தர்கள். சிவபெருமான் ஏழைகளின் கடவுள். ராமர் பணக்காரர்களின் கடவுள். இவ்விரு தெய்வங்களும் மக்களால் போற்றப்படுபவை'' என்றும் அவர் மேலும் கூறினார். ரேவந்த் ரெட்டியின் இக்கருத்து வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கலாச்சார பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,''சிவபெருமானுக்கும் ராமருக்கும் இடையே ரேவந்த் ரெட்டி அரசியல் ரீதியான பிளவை ஏற்படுத்துகிறார். இந்த கருத்துகள் கடும் கண்டனத்திற்கு உரியவை''என்று தெரிவித்தார். மேலும் பாஜக தலைவர்கள் சிவபெருமானை முன்னிறுத்துவதில்லை என்ற ரெட்டியின் கூற்றை மறுக்கும் வகையில், காசி விஸ்வநாதர் கோயிலுடனான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்பையும், வேமுலவாடாவிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தையும் சஞ்சய் சுட்டிக்காட்டினார். மேலும், முன்பு 'முஸ்லிம்கள் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள்' என்று கூறிய ரேவந்த் ரெட்டி, இப்போது ராமருக்கும் சிவபெருமானுக்கும் இடையே அரசியல் ரீதியான எல்லைகளை வகுக்கிறார். வேமுலவாடாவில் 'தட்சிண காசி'யையும், பத்ராச்சலத்தில் 'தட்சிண அயோத்தி'யையும் கொண்ட தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ரெட்டிக்கு, ராமரையும் சிவபெருமானையும் வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்பது தெரிந்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைத் திரட்டுவதற்கு காங்கிரஸ் மத மற்றும் பிராந்திய அடையாளங்களைப் பயன்படுத்துகிறது. புவியியல் அல்லது சமூக அடிப்படையில் இந்து மரபுகளைப் பிளவுபடுத்த வேண்டாம்'' என்று ரெட்டியிடம் கேட்டுக்கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/bjp-condemns-telangana-cm-reddys-remark-that-rama-is-the-god-of-the-rich-and-shiva-is-the-god-of-the-poor




