கோவை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தே.மு.தி.க, தி.மு.க கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால், இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். தாராபுரத்தில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன். யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தவறாக பேசுவதை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது. யாருக்கும் அந்த உரிமை இல்லை. பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொருத்தவரை எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்றுதான் நாங்கள் சொல்வேன். மற்றவர்கள் அவர்கள் கூட்டணி ஜெயிக்கும் என சொல்வார்கள். இது இடைத்தேர்தல். மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. பிரேமலதா இ.வி.எம் இயந்திரத்தில் பல குளறுபடிகள் நடப்பதாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் ஆட்சி மாறி இருக்கிறது. பழைய முறைப்படி தேர்தல் வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இ.வி.எம் பாக்ஸில் நிறைய தவறுகள் நடைபெறுகிறது. தே.மு.தி.க சார்பில் கிராமசபை கூட்டங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இவிஎம் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்கள். பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நான்கு முதல் ஐந்து மடங்கு உயர்ந்து இருப்பதால் மக்கள் பாதிக்கின்றனர். விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை திரும்ப பெற வேண்டும். மின்கட்டண பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனை, பாலியல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை விஜய் இன்னும் நிறைவேற்றவில்லை” என்றார். பிரேமலதா `விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது' என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு, “முதலில் ஆதவ் அர்ஜுன் கேப்டனை நேரில் பார்த்திருக்கிறாரா? முதலில் அவர் கேப்டனை பார்த்து இருக்கின்றாரா? சினிமாவில் ஸ்கிரீனில் பார்த்து இருப்பார். கேப்டனின் ஆன்மா என்னை சுற்றி இருக்கும், எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தான் அவரது ஆன்மா இருக்கும். கேப்டன் குடும்பத்திற்கும், கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் கேப்டன் ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதையே கிடையாது. அவர்கள் கேப்டனை பக்கத்தில் கூட பார்த்தது கிடையாது. தம்பி ஆதவ் அர்ஜுனா இதோடு அவரைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பதிலளித்தார். ’டிரைவர் பொண்ணு, மூணு வருச கடும் உழைப்பு.’ - பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யாவின் தாய் உருக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/premalatha-vijayakanth-says-adhav-arjuna-has-no-right-to-talk-about-captain-anma




