புதுடெல்லி வெள்ளம் பாதித்த நேபாள நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 35 டன் எடையுள்ள நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தின. நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 589 பேர் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 102 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர். நேபாளத்திற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இதன்படி, இதுவரை இந்திய விமான படையின் விமானம் மூலம் 7 முறை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. நிவாரண பொருட்கள் இந்நிலையில், வெள்ளம் பாதித்த நேபாள நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 35 டன் எடையுள்ள நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய பேரிடர் மீட்பு படைக்கான சாதனங்கள், தடய அறிவியல் பொருட்கள் மற்றும் இந்திய ராணுவ குழுவினருக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு 8-வது இந்திய விமான படையின் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது என தெரிவித்து உள்ளது. நேபாள வெள்ளத்திற்கு இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காயமடைந்த 320-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/nepal-floods-india-sends-35-tonnes-of-relief-material




