இஸ்லாமாபாத், சிந்துநதியை தடுத்தால் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இந்த நிலையில் சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் தனது சுதந்திர தின உரையின்போது, நதிநீர் அமைப்பில் பாகிஸ்தானுக்குரிய பங்கிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஒவ்வொரு நீர் துளியும் ஒரு சிவப்புக் கோடு ஆகும் என்று தெரிவித்தார். மேலும் அமைதியை பலவீனமாகக் கருதக்கூடாது என்றும், பாகிஸ்தானின் இறையாண்மைக்குச் சவால் விட முடியாது என்றும் கூறினார். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும்வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நீக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/pakistan-prime-minister-shahbaz-sharifs-independence-day-speech




