ஆம்ஸ்டெல்வின், 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 'டி' பிரிவில் அங்கம் வகிக்கும் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் 3-ம் நிலை அணியான இங்கிலாந்துடன் மல்லு கட்டியது. முதல் வினாடியில் இருந்தே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் நிகோ லஸ் பண்டுராக் 13-வது நிமிடத்தில் கோலடித்தார். அடுத்த 10 நிமிடங்களில் இந்தியா 2 கோல் போட்டு அசத்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 16-வது நிமிடத்திலும், தில்பிரீத் சிங் 24-வது நிமிடத்திலும் கோலடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் பிற்பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி வீரர்கள் ஸ்டூவர்ட் ரஷிமியர் 38-வது நிமிடத்திலும், ஹென்ரி கிராப்ட் 42-வது நிமிடத்திலும், நிகோலஸ் பண்டுராக் மீண்டும் 42-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்தனர். முடிவில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-india-defeated




