மாதந்தோறும் வசூலாகும் ஜி.எஸ்.டி. விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வரு கிறது. அந்தவகையில் கடந்த மாதம் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி விவரத்தை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் மொத்த ஜி.எஸ்.டி. ரூ.2.03 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகி இருக்கிறது. இது 14.7 சதவீதம் அதிகம் ஆகும். உள்நாட்டு சேவைகளின் மூலம் வசூலான ஜி.எஸ்.டி. ரூ.1.38 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலம் வசூலான ஜி.எஸ்.டி. ரூ.65,525 கோடியாகவும் இருந்தது. திரும்ப வழங்கிய தொகைகள் போக, செப்டம்பர் மாதத்தின் நிகர ஜி.எஸ்.டி வசூல் 18.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.76 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதத்துடன் நிறைவடைந்த முதல் அரையாண்டில் மொத்தம் ரூ.12.46 லட்சம் கோடிக்குமேல் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் நிகர வசூல் ரூ.10.66 லட்சம் கோடி எனவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/business/do-you-know-how-many-lakh-crore-rupees-were-collected-in-gst-for-the-month-of-september




