தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 'லூசிபர்', 'ப்ரோ டாடி', 'எம்புரான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பாராட்டுகளை பெற்றுள்ள அவர், தற்போது பல்வேறு முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரித்விராஜ், 'சலார் 2', 'கலிபா' உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார். 'ஐ நோபடி' படத்தில் மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி இந்த நிலையில், பிரித்விராஜ் நடித்துள்ள புதிய திரைப்படமான 'ஐ நோபடி' படத்தை 'ரோஷாக்' படத்தின் இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ளார். படத்திற்கு சமீர் அப்துல் திரைக்கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து நடிகை பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு 'என்னு நிண்டே மொய்தீன்', 'மை ஸ்டோரி' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் 'ஐ நோபடி' மூலம் திரையில் ஒன்றாக இணைந்துள்ளது. ஆக்ஷன் பின்னணியில் உருவான படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் தயாரித்துள்ளார். மேலும், அவரது மனைவி சுப்ரியா மேனன் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். 'அனிமல்' திரைப்படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆக்ஷன் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பிரித்விராஜின் மிரட்டலான தோற்றம் ஆகியவற்றால் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சென்சார் சர்டிபிகேட் இப்படம் வருகிற 9-ந் தேதி உலகளவில் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு "யு/ஏ" சர்டிபிகேட் வழங்கியுள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டோர் இந்த படத்தினை தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம். Cleared. Certified. Ready. In cinemas worldwide, July 9th! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/censor-board-grants-ua-certificate-to-the-film-nobody




