தேனி, தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களுடன் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக வருசநாடு சுற்றுவட்டார கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/னியில்-கடையடைப்பு-போராட்டம்-protest-against-the-eviction-of-hill-village-residents-shop-closure-strike-in-theni




