திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர், ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( 70). இவர், ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு பல் வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பல் மருத்துவரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர், அங்குள்ள நர்ஸ்கள் அவரை அழைத்த போது அவர் இருக்கையிலேயே பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். trichy அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சந்திரசேகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அவரது மனைவி சந்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் திடீரென்று இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/trichy-former-railway-deputy-commissioner-died




