‘ஐபோன் டியோ’ புதிய மாடல் ஐபோன் உலகம் முழுவதும் டெக் ஆர்வர்லர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐபோன் 18 சீரிஸ் போன்கள் மற்றும் ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சிரீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் புதிய சிஇஓவாக பதவியேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்திய இந்த முதல் நிகழ்வை உலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் நேரிலும் நேரலையிலும் பார்த்தனர். ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய போனை அறிமுகம் செய்தது. ‘ஐபோன் டியோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மடிக்கக்கூடிய ஐபோன் 2 வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் 256 ஜி.பி. சேமிப்பு திறன் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 512 ஜி.பி. மாடல் ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 900-க்கும், 1 டி.பி. மாடல் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 900-க்கும், 2 டி.பி. மாடல் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டார் ஒயிட், நைட் ஸ்கை ஆகிய 2 வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. அக்டோபர் 16-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. அக்டோபர் 23-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா ஐபோன் டியோவில் 7.6 அங்குல ‘சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர்’ மடிக்கக்கூடிய திரை இடம்பெற்றுள்ளது. இது ஐபோன் 18 புரோவில் உள்ள 6.3 அங்குல திரையைவிட 80 சதவீதம் பெரியதாகும். திரையின் நடுப்பகுதியில் மடிப்பு கோடு அதிகமாக தெரியாத வகையில் சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதிபலிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. மடிக்கக்கூடிய உள்புறத் திரையில் வலிமையான கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய சிறப்பு பாலிமர் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் 5.4 அங்குல ‘சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர்’ திரை வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் திரை மற்றும் பின்புறத்தில் செராமிக் ஷீல்டு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 2 கேமராக்கள் உள்ளன. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவும், 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும் இடம்பெற்றுள்ளன. 4கே தரத்தில் வினாடிக்கு 120 பிரேம்கள் வேகத்தில் காணொளியை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. முன்புறத்தில் ‘சென்டர் ஸ்டேஜ்’ கேமரா வழங்கப்பட்டுள்ளது. மடிக்கக்கூடிய உள்புறத் திரையின் கீழ் ‘பேஸ் டைம்’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நாள் முழுவதும் பயன்படுத்தலாம் ஐபோன் டியோவில் நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. உள்புறத் திரையை பயன்படுத்தும்போது 31 மணி நேரம் வரை காணொளியை இயக்க முடியும். வெளிப்புறத் திரையை பயன்படுத்தும்போது 44 மணி நேரம் வரை காணொளியை இயக்க முடியும். இரு திரைகளையும் இணைத்து பயன்படுத்தும்போது 22 மணி நேரம் வரை பேட்டரி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரை காணொளியை இயக்க முடியும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.இந்த போன் மின்காந்த வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. உலகளவில் ஐபோன் டியோவில் இ-சிம் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான சிம் அட்டை வசதி நீக்கப்பட்டதன் மூலம் பேட்டரிக்கு கூடுதல் இடம் கிடைத்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த போன் ‘ஐஓஎஸ் 27’ இயங்குதளத்துடன் வருகிறது. மடிக்கக்கூடிய திரைக்கு ஏற்ற வகையில் இதில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்துவதற்கான பிரிக்கப்பட்ட திரை வசதி, செயலிகளுக்கு இடையே எளிதாக மாறும் வசதி உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/launch-of-apples-first-foldable-iphone-do-you-know-the-price-in-india




