திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 3 அடுக்குகள் கொண்ட அன்னதானக் கூடம், மலைக்கோவில் பகுதியில் புதிதாக 20 கடைகள், மலைப்பாதையில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கான சுங்கச்சாவடி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்கொடை இந்நிலையில், முருகன் கோவில் நுழைவுப் பாதையில் அமைக்கப்பட உள்ள சுங்கச்சாவடியில் தானியங்கி கதவுகள் அமைப்பதற்காக ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஸ்டேட் வங்கியின் அகில இந்திய தலைவர் சல்லா சீனிவாசலு செட்டி, தானியங்கி கதவுகள் அமைப்பதற்கான காசோலையை கோவில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, மோகனன் ஆகியோரிடம் வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-33-lakh-donation-to-thirutani-murugan-temple



