புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த நித்தியானந்தரின் சீடர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது, ஏம்பலத்தில் அமைந்திருக்கும் தியான பீடத்திற்கு விரைவில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமியுடன் நித்தியானந்தா சீடர்கள் மேலும், ``சுவாமி நித்தியானந்தா புதுச்சேரி வருவது தொடர்பாக மத்திய அரசிடமும் பேசி வருகிறோம். அதனால் அவர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு, ``சரி. அவர் வரட்டும். பார்த்துக் கொள்ளலாம்." என்று சொன்ன முதல்வர் ரங்கசாமிக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை வழங்கினர் தியான பீட நிர்வாகிகள். பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா, கடந்த 2020-ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக வீடியோக்களில் மட்டும் பேசி வரும் நித்தியானந்தா, புதுச்சேரிக்கு வருவதாக அவரின் சீடர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ``எங்களை நித்தியானந்தா இருக்கும் கைலாச நாட்டுக்கு அனுப்பிடுங்க" - ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/nithyanandha-who-has-been-in-hiding-outside-india-for-the-past-few-years-is-planning-to-visit-puducherry




