வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு நாளையே (ஜூலை 31) கடைசி தேதி. ஒருவேளை நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லையென்றால், தாமதக் கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும். தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் குறிப்பிட்ட நபரின் வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டவில்லை என்றால், தாமதக் கட்டணம் வெறும் ரூ.1,000 மட்டுமே. இந்த ரூ.1,000, ரூ.5,000 தாமதக் கட்டணத்தைத் தவிர்க்க, நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவதே நல்லது. வருமான வரிக் கணக்கு தாக்கல்ட்ரம்ப் சொன்னது போல், ஈரான் மீது 'சக்திவாய்ந்த தாக்குதல்' நடத்தும் அமெரிக்கா; என்ன நடக்கிறது? எப்படி இருந்தாலும், கடைசித் தேதி நீட்டிக்கப்படும் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், இந்த முறை கடைசித் தேதி நீட்டிக்கப்படாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வருமான வரிக் கட்டத் தேவை இல்லாதவர்கள், நீங்களாகவே உங்களுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். அதற்கான வழிமுறையை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகள் இவைதான். இந்தத் தவறுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. > வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, சம்பளதாரர்கள் நிறுவனம் தரும் ஃபார்ம் 16 தகவல்களை வைத்து மட்டுமே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவார்கள். இந்தத் தவறை அறவே தவிர்த்துவிடுங்கள். சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸ்ட் டெபாசிட், டிவிடெண்ட் வருமானம், வாடகை வருமானம் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும். செக் செய்ய வேண்டும். AIS, ஃபார்ம் 26AS தகவல்கள் தானாக வருமான வரிக் கணக்குத் தாக்கலில் அப்டேட் ஆகியிருக்கும் தகவல்களோடு ஒத்துப்போகிறதா என்பதை சரிப்பாருங்கள். வருமான வரிக் கணக்குத் தாக்கல்ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம் > சரியான ITR ஃபார்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். தவறான ஐ.டி.ஆர் ஃபார்மைத் தேர்ந்தெடுத்துவிட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து முடித்ததே வீணாகிவிடும். இது ரீஃபண்ட் நடைமுறையை சிக்கலாக்கும். தாமதமாகும். > பலரும் ஐ.டி.ஆர் சப்மிட் செய்த கையோடு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டதாக நினைத்துவிடுகிறார்கள். அது தவறு, வருமான வரிக் கணக்குத் தாக்கலை சப்மிட் செய்த பின், அதை 'Verify' செய்வது மிக மிக அவசியம். > வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, உரிய தகுதிகள் இல்லாமலேயே வரி விலக்குகளைப் பலர் கோருவார்கள். இன்னொரு பக்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், சொத்து பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மூலதன ஆதாயங்களைக் கணக்கில் காட்டமாட்டார்கள். இந்த இரண்டையுமே கட்டாயம் தவிர்க்க வேண்டும். > ரீஃபண்ட் செய்யப்படுவதற்கான வங்கிக் கணக்குத் தகவலை Verify செய்ய தவறிவிடாதீர்கள். இதை மறந்தால் ரீஃபண்டில் சிக்கல் ஏற்படும். > பான், ஆதார் கார்டு, பெர்சனல் தகவல்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தாலும், வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறுகள் ஏற்படும். நீட் வினாத்தாள் கசிவு: "ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/personal-finance/itr-filing-deadline-tomorrow-avoid-5000-late-fee




