பெங்களூரு, பெங்களூரு அருகே நந்தி மலையில் நடைபெற்ற பருவமழை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரத்தான் போட்டி பெங்களூரு அருகே உள்ள நந்தி மலையில் பருவமழை மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நேற்று நடந்தது. பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் இளைஞர், விளையாட்டு நலத்துறை சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 10 கிலோ மீட்டர் மற்றும் 21 கிலோ மீட்டர் பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 4,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெங்களூரு மன்யதா டெக் பார்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பஞ்சாப்பை சேர்ந்த அமன்தீப் சிங் ஜக்டே (வயது 31) என்பவரும் பங்கேற்றார். 21 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அவர். பாதி தூரம் ஓடிய நிலையில் சரிந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அமன்தீப் சிங்கை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழப்பு அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அமன்தீப் சிங் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக பஞ்சாப்பில் உள்ள அமன்தீப் சிங்கின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தானில் பங்கேற்ற தனியார் நிறுவன ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/youth-dies-after-fainting-while-running-marathon




