சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; மத்திய பாஜக அரசு தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தலித்துகள், பழங்குடியின மக்கள் சிறுபான்மையிருக்கு எதிராக செயல்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் படு தோல்வி அடைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. சட்டபூர்வ வேலை பெறும் உரிமை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, விபிஜி ராம் ஜி என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சட்டபூர்வ வேலை பெறும் உரிமை மறுக்கப்பட்டு, அரசின் விருப்பம் சார்ந்ததாக மாற்றப்படுகிறது. மாநில அரசுகளின் மீது நிதிச் சுமையும் ஏற்றப்படுகிறது. இது கிராமப்புற பாட்டாளிகளுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பதிலிருந்து அரசு விலகிக் கொள்ளும் வஞ்சகச் செயலாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் சமத்துவக் கோட்பாடுகள், சமூக நீதி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றிற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இத்தகைய போக்கை கண்டித்தும், கொள்கை மாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்தியும், “மாற்றத்திற்கான பேரணியை” டெல்லியில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து தருமாறு இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் கோரப்பட்டது. அந்த வகையில் கேரளாவில் இருந்து ஒரு சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதைப் போலவே காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்ல தனி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில்வே நிர்வாகமும் அதன் விதிமுறைகளை அனுசரித்து முன் பணமும் பெற்றுக் கொண்டு, தனி சிறப்பு ரயில் ஒதுக்கீடு செய்ய முதல் கட்ட ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் நேற்றைய தினம் (19.08.2026) திடீரென அந்த முன்பணத்தை ரயில்வே நிர்வாகம் திருப்பி அளித்துள்ளது. சிறப்பு ரயிலுக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. சங் பரிவார் அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களுக்கும், விழாக்களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்ற இந்திய ரயில்வே துறை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தக்கூடிய, உழைக்கும் மக்கள் பங்கேற்கக்கூடிய இயக்கத்திற்கு சிறப்பு ரயிலை வழங்க மறுத்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது. மத்திய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,நாளை (21.08.2026) நடைபெறும். இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வர். இந்திய ரயில்வே நிர்வாகம் தனது நிலையை மறுபரிசீனை செய்து, சிறப்பு தனி ரயில் இயக்க மறுத்தால் திருச்சி மண்டலத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலையை உருவாக்கும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-protests-against-the-central-government




