சென்னை, உலகக் கோப்பையில் இருந்து அர்ஜென்டினாவை நீக்க கோரி தொடங்கப்பட்ட மனு 2.3 கோடி கையொப்பங்களை பெற்றுள்ளது. சர்ச்சைகள் சமீபத்தில் முடிவடைந்த பிபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி 2-வது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறினாலும், அதை சுற்றியுள்ள சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வரும் பிபா உலகக் கோப்பை தொடர்களில் அர்ஜென்டினா அணி பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி தொடங்கப்பட்ட இணையவழி மனு தற்போது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் நடத்தை மற்றும் பிபா சாதகமான இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, உலகம் முழுவதும் ரசிகர்கள் அர்ஜென்டினாவை நிரந்தரமாக உலகக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்று இணையத்தில் மனு ஒன்றை தொடங்கினர். 2.3 கோடி கையொப்பங்கள் ஆரம்பத்தில் 50 லட்சம் கையொப்பங்களை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட இந்த மனு, தற்போது 2.3 கோடிக்கும் மேற்பட்ட கையொப்பங்களை பெற்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அந்த அணிக்கு எதிராக உலகம் முழுவதும் ஒரு எதிர்மறை கருத்து உருவாகியிருப்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், 2.3 கோடி கையொப்பங்களை பெற்றுள்ள இந்த மனு, அதிக கையொப்பங்கள் பெற்ற இணையவழி மனுக்களில் ஒன்றாக மாறியுள்ளது. கின்னஸ் உலக சாதனையில் 2.43 கோடி கையொப்பங்களுடன் “ஜூபிலி 2000” முதலிடத்தில் உள்ளது. விமர்சனங்கள் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்த உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 19 கோல்களை அடித்தது. இருப்பினும், போட்டிகளின் போது அர்ஜென்டினா வீரர்கள் எதிரணியை மிகவும் ஆக்ரோஷமாக எதிர்கொண்டதாகவும், நடுவர்கள் அவர்களிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/petition-seeking-argentinas-fifa-world-cup-ban-closes-in-on-guinness-world-record




