சென்னை, மதுரை மற்றும் சேலம் ரெயில்வே கோட்டங்களில் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜூலை 29-ந் தேதி இரவு 10.40 மணிக்கு புறப்படும் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது, வாஞ்சி மணியாச்சியுடன் ரெயில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜூலை 30-ந் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலியில் இருந்து அன்று மாலை 5.10 மணிக்கு புறப்படும். லோக்மானியா திலக் எக்ஸ்பிரஸ் இதேபோல், நாகர்கோவிலில் இருந்து லோக்மானியா திலக்குக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 9, 12, 16, 19, 23, 26, 30, ஆகஸ்டு 2, 6 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து மாற்றுப்பாதையில், அதாவது மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சியை சென்றடையும். திண்டுக்கல் செல்லாது. இவ்வாறு மாற்றுப்பாதையில் செல்லும்போது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி - ஐதராபாத் அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து ஐதராபாத்திற்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 10, 17, 24, 31 மற்றும் ஆகஸ்டு 7 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சியை சென்றடையும். கொடை ரோடு, திண்டுக்கல் செல்லாது. இவ்வாறு மாற்றுப்பாதையில் செல்லும்போது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். கன்னியாகுமரி - ஹவுரா மேலும், கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு காலை 5.50 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 4 (நாளை), 11, 18, 25 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். கொடை ரோடு, திண்டுக்கல் செல்லாது. மாற்றுப்பாதையில் செல்லும்போது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். குருவாயூர் - சென்னை அதேபோல், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 3 (இன்று) மற்றும் ஜூலை 8 முதல் ஆகஸ்டு 6-ந் தேதி வரை (ஜூலை 14, 21, 28 மற்றும் ஆகஸ்டு 4 ஆகிய தேதிகள் நீங்கலாக) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சியை சென்றடையும். மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல் மற்றும் மானாமதுரை ஆகிய இடங்களுக்கு செல்லாது. மாற்றுப்பாதையில் செல்லும்போது அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மதுரை - பிக்கானெர் மேலும், மதுரையில் இருந்து பிக்கானெருக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 16, 23 ஆகிய தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். கொடை ரோடு, திண்டுக்கல் செல்லாது. அவ்வாறு மாற்றுப்பாதையில் செல்லும்போது, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-changes-to-the-services-of-key-trains-southern-railway-announcement




