கோஹிமா, நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கில் அமைந்துள்ள மாநிலம் நாகாலாந்து. இம்மாநிலத்தில் 1990ம் ஆண்டு முதல் பூரண மது விலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கள்ளச்சாராயம் - 9 பேர் பலி இந்நிலையில், அம்மாநிலத்தின் துவன்சங் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 3 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க தீவிர எடுத்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/9-dead-in-nagaland-over-suspected-spurious-liquor-probe-on




