சென்னை, தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலவும் வளிமண்டல சூழல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. எந்தெந்த மாவட்டங்களில் மழை? இந்த வளிமண்டல நிலை காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடி, மின்னலுடன் மழை மேற்கண்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/weather/which-are-the-18-districts-in-tamil-nadu-where-there-is-a-chance-of-rain-until-7-pm




