நெல்லை, ஹோட்டல் உரிமையாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆண்டாள் தெரு பகுதியை சேர்ந்தவர் காஜா செரிப். இவர் மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டையில் இரண்டு பகுதிகளிலும் ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள ஹோட்டலில் கணக்கை முடித்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் மேலப்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 5 பேர் அவரை மறித்து கைகளில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த காஜா செரிப் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். பின்னர் அந்த வழியே சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/hotel-owner-hacked-to-death-with-sickle-police-launch-net-to-nab-mysterious-individuals



