சென்னை, ஐகோர்ட்டு வழக்கை முடித்ததும், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு தடை தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்தது. அந்த தடையை நீக்கக்கோரி முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிரந்தரமானதல்ல அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பு கூறுகையில், “இடைத்தேர்தல் அறிவிக்காதது நிரந்தரமானதல்ல. வழக்கை ஐகோர்ட்டு முடித்ததும் தேர்தல் நடத்தப்படும். பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப் பட்டதால் அத்தொகுதி காலியாக உள்ளது. எனினும், மேல்முறையீட்டுக்கு, நவம்பர் 24ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் சட்டப்படி முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்படவில்லை. ஆறு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது. தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். அதே காலகட்டத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு முடிவெடுத்த பின், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்டோரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டது. விசாரணை ஒத்தி வைப்பு இந்த வழக்கு விசாரணையின் போது, முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜய பாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தரப்பில் இடைத்தேர்தல் நடத்துமாறு வாதிடப்பட்டது. திருச்சி கிழக்கு தி.மு.க., வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்தக்கூடாது' என வாதிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பு வாதத்துக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-by-elections-for-the-5-constituencies-be-held-election-commission-provides-clarification




