Fuld artikel
பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றியை ஸ்டார்மர் பெற்றுத் தந்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவரது நிர்வாகத்தின் மீதான அதிருப்தி காரணமாக, அவரது தனிப்பட்ட செல்வாக்கும் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கும் பொதுமக்களிடையே கடுமையாகச் சரிந்து வந்தன. இதனால் அரசாங்கத்தின் நலிவடைந்து வரும் நிலையை மீட்டெடுக்க புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே அழுத்தங்கள் அதிகரித்தன. கெய்ர் ஸ்டார்மர் அவருக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், கடந்த வாரம் நடைபெற்ற சிறப்புத் தேர்தலில் கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்காக ஸ்டார்மருக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக பர்ன்ஹாம் பகிரங்கமாகச் சவால் விடுத்தார். இந்த அரசியல் நகர்வுகளால் கடந்த வார இறுதியில் ஸ்டார்மருக்குக் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் மோடி - மெலோனி சந்திப்பு; உலக அரங்கில் கவனம் ஈர்த்த 'மெலோடி' கூட்டணி! தலைமைப் பதவிக்கான போட்டியில் பர்ன்ஹாமின் கை ஓங்கியதைத் தொடர்ந்தே, கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியைத் துறக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஸ்டார்மரின் இந்த அதிரடி விலகலின் மூலம், பிரிட்டன் அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தங்களது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே பதவியை விட்டு விலகும் ஆறாவது பிரதமர் என்ற வரிசையில் இணைந்திருக்கிறார். கெய்ர் ஸ்டார்மர் தன் ராஜினாமா குறித்து டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கெய்ர் ஸ்டார்மர், ``புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக பிரதமராகப் பதவியில் நீடிப்பேன்" என்று கூறினார். இந்த அறிவிப்பை வெளியிடும்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். ஒருகட்டத்தில் அவரது குரல் தழுதழுத்தது. தொடர்ந்து பேசிய அவர், ``ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். இன்னும் சில வாரங்களில் பிரதமர் பொறுப்பில் இருந்து முழுமையாக வெளியேறுவேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மோடி - ட்ரம்ப் என்ன பேசினார்கள்? - சசி தரூர் Vs காங்கிரஸ் வெடித்த பிரச்னை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor


