மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது.இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிறங் கியது. ஆனால், அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு முழுமையாக வெளியேறி, பாதுகாப்பான பகுதிக்கு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட் டது. அதே நேரத்தில், மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்படுவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானம் அதே ஓடுதளத்தில் அசுர வேகத்தில் ஓடத்தொடங்கியது. முன்னால் சென்ற விமானம் இன்னும் ஓடுதளத்தை விட்டு நகரவில்லை என்பது தெரியாமல், டெல்லி விமானம் அதிவேகமாக புறப்பட தயாரான தால், இரு விமானங்களும் நொடிப்பொழுதில் நேருக்கு நேர் மோதும் அபாயகரமான சூழ்நிலை உருவானது. அவசர உத்தரவு விமானங்கள் மிக நெருக்கமாக வருவதை கண்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானிகளுக்கு புறப்பாட்டை நிறுத்துமாறு அவசர உத்தரவு பிறப்பித்தனர். கட்டுப்பாட்டு அறையின் துரிதமான எச்சரிக் கையை தொடர்ந்து, விமானி உடனடியாக விமானத்தின் வேகத்தை குறைத்து சாதுரியமாக நிறுத்தினார்.இதனால் விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்ட வசமாக நூலிழையில் உயிர்தப்பினர். விசாரணைக்கு உத்தரவு ஏற்கனவே ஒரு விமானம் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருக்கும் போதே, டெல்லி செல்லும் மற்றொரு விமானத்திற்கு புறப்பட அனுமதி வழங்கப் பட்டது எப்படி? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த அதி காரிகள் யார்? தவறு எங்கு நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/two-planes-head-towards-each-other-on-the-same-runway-panic-at-mumbai-airport




