நாட்டில் பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மத்தியப் பிரதேசமும் சேர்ந்து இருக்கிறது. போபாலில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருமணம், வாரிசுரிமை, 'லிவ்-இன்' உறவுகள் (திருமணம் சாராத கூடிவாழும் முறை) மற்றும் மத சுதந்திரம் ஆகிய விவகாரங்களில் இச்சட்டம் சம உரிமைகளை வழங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச அரசு இயற்றி இருக்கும் பொது சிவில் சட்டத்தின்படி திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' உறவில் ஈடுபட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ''ராம் ஆகட்டும் அல்லது ரஹீம் ஆகட்டும், அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வதற்காகவே இந்தப் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது," என்று முதலமைச்சர் மோகன் யாதவ் கூறினார். லிவ்-இன் அவர் மேலும் கூறுகையில், ''பொது சிவில் சட்டப்படி வாழ்க்கைத் துணை உயிருடன் இருக்கும்போது ஒரு திருமணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாகவே விவாகரத்து செல்லுபடியாகும். திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி முதல் மாநகராட்சி வரையிலான அனைத்து நிலைகளிலும் திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொத்து மற்றும் வாரிசுரிமை விவகாரங்களில், பெண்களுக்குப் பாதிப் பங்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த முந்தைய நடைமுறை மாற்றப்பட்டு, இனி மகன்களும் மகள்களும் சம உரிமைகளைப் பெறுவார்கள். தனிநபர்கள் எவ்விதக் கட்டாயமுமின்றி சுதந்திரமாக தங்கள் மதசடங்குகளைப் பின்பற்றவும், வழிபாட்டு முறைகள் மற்றும் சம்பிரதாயங்களைப் பின்பற்றவும் சுதந்திரம் உண்டு. மேலும் எந்த மதமும் இழிவுபடுத்தப்படாது. அதேவேளையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் குறிப்பாக பழங்குடியின குழுக்கள் மீது பொது சிவில் சட்டம் திணிக்கப்படாது" என்று முதலமைச்சர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/uniform-civil-code-in-madhya-pradesh-what-is-penalty-if-married-person-is-in-live-in-relationship




