புதுடெல்லி, உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராமலீலா மைதானத்தில் கடந்த 8-ந் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டத்தில் பேசினார். 2 நாட்கள் கழித்து, அந்த இடத்தில் ஸ்ரீராமசேனா அமைப்பினர் புனிதப்படுத் தும் சடங்குகளை நடத்தினர். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மல்லிகார் ஜுன கார்கேவை அவமதிக்கும்வகையில், அவர் பேசிய இடத்தில் புனிதப்படுத்தும் சடங்குகளை நடத்தியது ஒரு குற்றம். கார்கேவுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது மத் திய, மாநில அரசுகளின் கடமை. சம்பவம் நடந்து 20 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய பிரதமர் மோடி உத்தர விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/disrespect-shown-to-kharge-rahul-gandhi-demands-registration-of-a-case




